ADDED : ஆக 14, 2024 01:56 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க, 8வது மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செ-யலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். கூட்டத்தில், தமிழக முதல்வர், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிபோல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும், 10 சதவீதம் கூடு-தலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கியது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய், சத்துணவு, அங்-கன்வாடி, கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வனக்கா-வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும். இவர்க-ளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.