/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி
ADDED : செப் 11, 2024 06:45 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, இலுப்புலி கிரா மம், மாரப்பம்பா-ளையம் அருந்ததியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் வேண்டும்.
காளியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி, மா. கம்யூ.,வினர், அப்பகுதி வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்-தினர்.
இதையடுத்து, திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த் தலை-மையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து, சம்பந்தப்-பட்ட இடத்தில் தாசில்தார் ஆய்வு செய்தார். தற்போது, முறை-யான நிலஅளவீடு செய்யப்பட்டு
கோவில் நிலம் மீட்டகப்பட்ட-துடன், விளையாட்டு மைதானம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்-யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர்.