/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழி வேன் மோதி போட்டோகிராபர் பலி
/
கோழி வேன் மோதி போட்டோகிராபர் பலி
ADDED : ஆக 19, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 30; போட்டோகிராபர். இவர், பள்ளிப்பாளையம் அருகே, மொளசி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, டூவீலரில் புள்ளிகல்மேடு பகு-தியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கோழி ஏற்றி வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், நாகராஜ் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.