/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றியதால் மறியல்
/
திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றியதால் மறியல்
திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றியதால் மறியல்
திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றியதால் மறியல்
ADDED : ஆக 26, 2024 02:43 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவின், முதல் காப்பு கட்டு விழா, கடந்த, 11ல் துவங்கியது. அதை தொடர்ந்து, நேற்று, 25ல் அரண்மனை பொங்கல், வடிசோறு விழாவும், இன்று, 26ல் பூமிதி விழா நடக்கிறது. விழாவிற்காக, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடை வீதி, அரசமரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
இந்த பேனர்களை போலீசார் மற்றும் டவுன் பஞ்., அதிகாரிகள், நேற்று முன்தினம் அகற்றினர். இதை கண்டித்து, அன்று இரவு சேந்தமங்கலம் ரவுண்டானா பகுதியில் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு சென்ற, டி.எஸ்.பி ஆனந்தராஜ், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால், சேந்தமங்கலத்தில் பரபரப்பு ஏற்-பட்டது.