/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் கட்டணமாக ரூ.2,400 வசூல் தண்ணீர் வராததால் தம்பதியர் தர்ணா
/
குடிநீர் கட்டணமாக ரூ.2,400 வசூல் தண்ணீர் வராததால் தம்பதியர் தர்ணா
குடிநீர் கட்டணமாக ரூ.2,400 வசூல் தண்ணீர் வராததால் தம்பதியர் தர்ணா
குடிநீர் கட்டணமாக ரூ.2,400 வசூல் தண்ணீர் வராததால் தம்பதியர் தர்ணா
ADDED : ஆக 13, 2024 06:17 AM
நாமக்கல்: ஆண்டுக்கு, 2,400 ரூபாய் கட்டணம் செலுத்தியும், குடிநீர் முறை-யாக வினியோகம் செய்யாததால், ஆத்திரமடைந்த தம்பதியர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடு-பட்டனர்.
குமாரபாளையம் தாலுகா, படைவீடு டவுன் பஞ்., மரவம்பாளை-யத்தான்காடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல், 42. இவரது மனைவி மல்லிகாவுடன், புகார் மனு அளிக்க, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில், தரையில் அமர்ந்து தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: நாங்கள் படைவீடு டவுன் பஞ்சாயத்தில், குடிநீர் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரு-கிறோம். இதற்காக ஆண்டுக்கு, 2,400 ரூபாய் கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எங்கள் வீட்டுக்கு முறையாக குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து, டவுன் பஞ்., செயல் அலுவ-லரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில், பல வீடுகளில், குடிநீர் கட்-டணம் செலுத்தாமல், தண்ணீர் பிடித்து பயன்படுத்து
கின்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்ததில், தினமும் காலை, 10:00 முதல், மாலை, 3:00 மணி வரை தண்ணீர் வினி-யோகம் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளனர். எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

