/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் அருகே பஸ் மீது டூவீலர் மோதல்
/
வெண்ணந்துார் அருகே பஸ் மீது டூவீலர் மோதல்
ADDED : செப் 11, 2024 06:45 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, மேட்டுமிஷின் பகுதியை சேர்ந்தவர் பாலு, 45; இவர் தன், 'ஹீரோ ஹோண்டா' டூவீலரில், ராசிபுரம் நோக்கி சென்றார்.
இவருக்கு முன், வெண்ணந்துார், ஆட்டியாம்-பட்டி பிரிவு, ராசிபுரம் வழியாக செல்லும், 15ம் எண் கொண்ட அரசு பஸ், ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை, வெண்ணந்துார் சர்க்கார் தோப்பை சேர்ந்த கார்த்திகேயன், 31, என்-பவர் ஓட்டிச்சென்றார். வெண்ணந்துார் அருகே, மேட்டுமிஷின் பகுதியில் சென்றபோது, அரசு பஸ்சின் பின்புறத்தில் டூவீலர் மோதியது. இதில், பாலு பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள், பாலுவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். வெண்ணந்துார் போலீசார்
விசாரிக்கின்றனர்.