/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றவே மாநகராட்சியாக தரம் உயர்வு: எம்.பி., ராஜேஸ்குமார்
/
அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றவே மாநகராட்சியாக தரம் உயர்வு: எம்.பி., ராஜேஸ்குமார்
அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றவே மாநகராட்சியாக தரம் உயர்வு: எம்.பி., ராஜேஸ்குமார்
அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றவே மாநகராட்சியாக தரம் உயர்வு: எம்.பி., ராஜேஸ்குமார்
ADDED : ஆக 14, 2024 01:55 AM
நாமக்கல்: ''நாமக்கல் நகரில், அடிப்படை வசதிகளை முழுமையாக நிறை-வேற்றவே, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதற்கான அரசாணையையும், அரசிதழையும் வெளி-யிட்டார். அவற்றை, நாமக்கல் மாநகராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி பெற்றுக்கொண்டார். இந்த மாநகராட்சி, இணைக்கப்-பட்ட, 12 கிராம பஞ்.,களுடன் சேர்ந்து செயல்பட துவங்கி உள்-ளது. மாநகராட்சி ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், மோகனுார், எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள, 12 கிராம பஞ்.,கள் இணைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் நகரம், முக்கியமான தொழில் நகரமாக விளங்குகிறது. இந்த மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி-யாக உயரும்பட்சத்தில், அரசின் அதிக நிதிகளை பெற்று மக்களு-டைய அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும். கரூர் மாவட்டம், நகராட்சியாக இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்-பட்டது. அங்கு நகராட்சியாக இருந்த போது என்ன வரி விதிக்கப்-பட்டதோ, அதை தான் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வருகி-றது. அதன்படி, நாமக்கல் மாநகராட்சியிலும், பழைய வரி முறை-யிலேயே வசூலிக்கப்படும். வரி உயர்வு என்பது தற்போதைக்கு இருக்காது.
இதில் கூடுதல் வசதி என்னவென்றால், அரசிடம் இருந்து வரக்கூ-டிய மானியம் அதிகமாக கிடைக்கும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். குடிநீர் தட்டுப்பாடின்றி வினி-யோகம் செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால், மாநகராட்சியாக இருந்தால் தான் போதிய நிதி பெறமுடியும். அதனடிப்படையில், நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாநகராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி, துணைத்த-லைவர் பூபதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், எம்.பி., ராஜேஸ்-குமாரிடம், அரசிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.