/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழைய காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
/
பழைய காவிரி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஜூலை 04, 2024 07:33 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதியில் நடந்து வரும் உயர்மட்ட மேம்-பால பணியை, கலெக்டர் உமா பார்வையிட்டார். தொடர்ந்து, பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது அவர் கூறுகையில், ''பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி, 320.71 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. தற்-போது வரை, 94 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மேலும், பள்-ளிப்பாளையம் சந்திப்பு முதல் ஈரோடு சாலையில், காவேரி பாலம் வரை மைய பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. அதனால், இன்று முதல் வரும், 30 வரை பழைய காவிரி பாலத்திலிருந்து வரும் வாகனங்களை தடை செய்து, புதிய பாலம் வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது,'' என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆர்.டி.ஓ., சுகந்தி, நகராட்சி கமி-ஷனர் தாமரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.