/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சங்ககிரி அருகே லாரி மீது பைக் மோதி பெண் பலி
/
சங்ககிரி அருகே லாரி மீது பைக் மோதி பெண் பலி
ADDED : பிப் 25, 2025 06:55 AM
சங்ககிரி: சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியில் மோட்டார் பைக், டாரஸ் லாரி மீது உரசியதில் பெண் பலியானார்.
சங்ககிரி, தேவண்ணகவுண்டனுாரை சேர்ந்தவர் பெருமாள், 40. கூலித்தொழிலாளியான இவர், நேற்று தன் மனைவி சோனியாகாந்தியுடன், 30, மாஸ்ட்ரோ எட்ஜ் மோட்டார் பைக்கில் சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு சென்று விட்டு, சங்ககிரிக்கு வந்து கொண்டிருந்தார்.
நேற்று மதியம், 2:15 மணிக்கு சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, டாரஸ் லாரியை முந்தி சென்றபோது, லாரியின் ஓரத்தில் பைக் மோதியது. இதில் பைக் பின்புறம் அமர்ந்து வந்த சோனியாகாந்தி, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின்சக்கரம் அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.சங்ககிரி போலீசார், லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.