/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பெண்ணுக்கு சொத்துரிமை' திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணம்: எம்.பி.,
/
'பெண்ணுக்கு சொத்துரிமை' திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணம்: எம்.பி.,
'பெண்ணுக்கு சொத்துரிமை' திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணம்: எம்.பி.,
'பெண்ணுக்கு சொத்துரிமை' திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணம்: எம்.பி.,
ADDED : செப் 11, 2024 06:45 AM
நாமக்கல்: ''கருணாநிதி கொண்டு வந்த பெண்ணுக்கு சொத்துரிமை திட்டம், இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்தது,'' என, திருச்சி சிவா எம்.பி., பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கு, நேற்று நடந்-தது. தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்-குமார் தலைமை வகித்தார்.
மாநகராட்சி தலைவர் கலாநிதி வர-வேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.,யுமான திருச்சி சிவா பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, கலை உலகில் தான் கண்ட கனவை ஆட்சிக்கு வந்த பின் செயல்படுத்தி காட்டினார். அவரது வழியில், முதல்வர் ஸ்டாலின், வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 1990ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கொண்டு வந்த பெண்ணுக்கு சொத்-துரிமை திட்டம்,
இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்-தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்-கொள்கையை கடைப்பிடிக்காத மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் நிதி உதவி தர முடியாது என, கூறுகின்றனர். கல்வி என்பது
பொதுப்பட்டி-யலில் உள்ளவரை, மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு.இவ்வாறு அவர் பேசினார்.தி.மு.க., செய்தி தொடர்பு செயலாளர் இளங்கோவன், பேச்சாளர் ஞானசம்பந்தம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்-கோவன், நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார், இளைஞரணி அமைப்பாளர்
விஸ்வநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.