ADDED : ஜூலை 11, 2011 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் நகராட்சி பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். கமிஷனர் தனலட்சுமி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 110 பணியாளர்களுக்கு இலவச பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சர்க்கரை மற்றும் சிறுநீர் பரிசோதனையும் செய்யப்பட்டது. இம்முகாம் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. டாக்டர்கள் கண்ணகி, கவிதா, சதாசிவம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.