தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்


ADDED : மே 23, 2024 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம் : புதன்சந்தை அருகே, கருங்கல்புதுார் மகா மாரியம்மன் கோவில் பண்டிகையையொட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.புதன்சந்தை அருகே, கருங்கல்புதுாரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில், கடந்த, 8ல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக பால்குட ஊர்வலம் நடந்தது.இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டு பால் கூடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை, தொடர்ந்து, இரவு மகா மாரியம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து பூஜை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us