நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேக்கரிக்கு 'சீல்'
குமாரபாளையம்,: குமாரபாளையம் - சேலம் சாலையில் உள்ள பேக்கரியில் சுகாதாரமற்ற முறையில் கேக் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு ஆணையர் வால்வேணா உத்தரவுப்படி, மாவட்ட நியமன அலுவலர் அருண் வழிகாட்டுதல்படி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ரங்கநாதன், லோகநாதன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேக் உள்ளிட்ட பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையை பூட்டி, 'சீல்' வைத்தனர்.

