ADDED : மார் 10, 2025 02:21 AM
பசிறுமலைக்கு சாலை வசதி
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, வெள்ளக்கல்பட்டியில் இருந்து மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு செல்ல, மாதகோவில் காலனி வழியாக செல்ல மலைப்பாதை இருந்தது. பெரிய பாறைகள், கற்கள், பள்ளம் மேடாக இருந்தது. இவ்வழியாக டூவீலர், சைக்கிளில் செல்லமுடியாத நிலை இருந்தது. இதனால், நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டிக்கு வரும் விவசாயிகள், மாணவ, மாணவியர், ஆத்துார் பிரதான சாலை, கும்பக்கொட்டாய், தண்ணீர் பந்தல்காடு வழியாக, ஏழு கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும். இதனால்,
ஆவாரங்கொரை, மாதாகோவில் வழியாக சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மாதாகோவில் காலனி வழியாக செல்ல, 1.7 கி.மீ., 1.22 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக மலைப்பாதையாக இருந்த சாலையை சமப்படுத்தி, ஜல்லி கொட்டி சமப்படுத்தியுள்ளனர். விரைவில் தார்ச்சாலை அமைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக, டவுன் பஞ்., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
*************************