/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீ தடுப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீ தடுப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 19, 2025 01:07 AM
தீ தடுப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வெப்படை தீயணைப்பு நிலையம் அலுவலர் செங்குட்வேலு தலைமையில், தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒத்திகையுடன் நடத்தப்பட்டது. இதில், தீ விபத்து ஏற்பட்டால் அங்கு இருந்து எப்படி தப்பிப்பது; பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக பாத்திரமாக கீழே இறங்குவது; தீ விபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றவது; தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது; எரியும் தீயை எவ்வாறு அனணப்பது மற்றும் பேரிடர் கால பாதுகாப்பு குறித்து செயல்விளக்க பயிற்சி ஒத்திகையுடன் ஏற்படுத்தப்பட்டது.