ADDED : மார் 27, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டூரில் குண்டம் விழா
பவானி:பவானி அருகே ஒரிச்சேரி காட்டூரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, ௧௮ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமனோர், கையில் அரளிப்பூ சுற்றிய மாலையுடன் பிரம்பு ஏந்தி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* ஜம்பை ஜே.ஜே.நகரில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. ஜம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.