ADDED : ஏப் 02, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடன் வாங்கஅவசர தீர்மானம்
ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சி அவசர கூட்டம், தலைவர் கவிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார். ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், 5.86 கோடி ரூபாயில் ஈரடுக்கு வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டும்பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.53 கோடி ரூபாய் கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி வேகத்தடை அமைத்தல், சாலை வசதி, குடிநீர் இணைப்பு குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் மீதும் விவாதம் நடத்தப்பட்டது. துணைத்தலைவர் கோமதி உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
************************

