ADDED : ஏப் 03, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் குழாய் சீரமைப்பு
நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக மோகனுார், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுபோல், நாமக்கல்-திருச்சி சாலை, அரசு சட்டக்கல்லுாரி எதிரே உள்ள சிவஞானம் தெரு சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஏராளமான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து சென்றது.
இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக, நேற்று முன்தினம் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, உடைந்த குடிநீர் குழாயை, நேற்று மாநகராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்கும் பணி நடந்தது.

