ADDED : ஏப் 03, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒயர் திருடியவர் சிக்கினார்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, எலந்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி; இவர், நேற்று மதியம் தன் விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது, மர்ம நபர் ஒருவர், கிணற்றில் இருந்த மோட்டர் ஒயரை திருடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த சின்னுசாமி அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். இதைக்கேட்ட அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த சின்னுசாமி, வெப்படை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், வெப்படையை சேர்ந்த கவுதம், 20, என தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

