தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மின்சாரம் தாக்கிஎலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கிஎலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கிஎலக்ட்ரீஷியன் பலி


ADDED : ஏப் 04, 2025 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 12:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்சாரம் தாக்கிஎலக்ட்ரீஷியன் பலி

நாமக்கல்:நாமக்கல்லில், மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலியானார்.நாமக்கல், என்.கொசவம்பட்டி ஜெய்நகரை சேர்ந்தவர் மதி, 54, எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளார். மாடியில் உள்ள தொட்டியில் தண்ணீர் தீர்ந்து விட்டதால், மோட்டாரை இயக்குவதற்காக பிளக்கில் ஒயரை சொருகி உள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில், மயங்கி கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே மதி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவி சுமதி, 40, அளித்த புகார்படி நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us