/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குட்டைமுக்கு பகுதியில்வேகத்தடை தேவை
/
குட்டைமுக்கு பகுதியில்வேகத்தடை தேவை
ADDED : ஏப் 05, 2025 01:20 AM
குட்டைமுக்கு பகுதியில்வேகத்தடை தேவை
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அடுத்த குட்டைமுக்கு பகுதியில் அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் உள்ள அபாய வளைவில், அதிவேக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் அதிகளவில் பாதிக்கின்றனர். எதிரே வரும் வாகனங்கள், அருகில் வரும்போது தான் தெரிகிறது. அந்தளவுக்கு சாலை வளைவு பகுதியாக காணப்படுகிறது. எனவே, வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். வாகனங்கள் வேகத்தை குறைத்து பயணிக்கும் வகையில், எச்சரிக்கை பலகைகள் வைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். மேலும், இரவில் ஒளிரும் விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.