/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு
/
நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு
ADDED : ஏப் 06, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு
ராசிபுரம்:கோடை வெயில் அதிகரித்து வருவதால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள், மதிய நேரத்தில் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், 20 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். நான்கு தினங்களுக்கு முன், தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல், நீர்மோர் பந்தல்
திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, நகர செயலாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.