/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலகவுண்டம்பட்டி போலீசாரைகண்டித்து உண்ணாவிரதம்
/
வேலகவுண்டம்பட்டி போலீசாரைகண்டித்து உண்ணாவிரதம்
ADDED : ஏப் 20, 2025 01:29 AM
ப.வேலுார்:-திருச்செங்கோடு அருகே, புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த செல்லமுத்து மகன் செந்தில்குமார், 47; இவருக்கும், இவரது உறவினர் சங்கர் என்பவருக்கும் தடம் பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த மார்ச், 25ல், அருண்குமார் மற்றும் சங்கர் ஆகியோர், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்ததாக, செந்தில்குமார், வேலகவுண்டம்பட்டி போலீசில் புகாரளித்தார்.
ஆனால், மேற்கொண்டுநடவடிக்கை எடுக்காத வேலகவுண்டம்பட்டி போலீசாரை கண்டித்து செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள், அவர்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில், நேற்று காலை முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.