/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அலங்காநத்தம் கிராமத்தில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
அலங்காநத்தம் கிராமத்தில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
அலங்காநத்தம் கிராமத்தில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
அலங்காநத்தம் கிராமத்தில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : மே 04, 2025 01:11 AM
நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தை சார்பில், எருமப்பட்டி வட்டாரம், அலங்காநத்தம் கிராமத்தில், வேளாண் துணை இயக்குனர் நாசர் உத்தரவுப்படி, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்தார்.
அப்போது, 'உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு அடையாள அட்டை பெறுவதற்கான ஆவணங்கள், புதிய உழவர் சந்தை நடைமுறைகள், இலவச பஸ் வசதி, காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறைகள் குறித்து விளக்கினார். மேலும், உழவர் சந்தை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள், கடைகள் ஒதுக்கீடு' குறித்து விளக்கினார்.
முன்னோடி விவசாயிகள், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, உதவி வேளாண் அலுவலர்கள் ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
*************