ADDED : செப் 12, 2025 02:25 AM
ராசிபுரம், ராசிபுரம் பகுதியில் காலை முதல் வெயில் அதிகம் இருந்தது. ஆனால், மாலையில் வெயில் குறைந்து மேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டது. இரவு, 7:30 மணிக்கு காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. ராசிபுரம் மட்டுமின்றி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பாளையம், கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி, அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணிநேரம் பெய்த மழையால், ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை, நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. எருமப்பட்டி, 5 மி.மீ., குமாரபாளையம், 10.8, மோகனுார், 6.5, நாமக்கல், 6, பரமத்தி வேலுார், 4, புதுச்சத்திரம், 43, ராசிபுரம், 5, சேந்தமங்கலம், 41, திருச்செங்கோடு, 36.4, கலெக்டர் ஆபீஸ், 28, கொல்லிமலை செம்மேடு, 2.5 மி.மீ., என மாவட்டம் முழுதும், 188.2 மி.மீட்டர் மழை பெய்தது.