ADDED : நவ 29, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று மதியம், 30 வயதுக்குட்பட்ட, இரண்டு இளம் பெண்களுடன், மூன்று இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர். இதில், ஒரு இளம் பெண்ணிடம், மூன்று இளைஞர்களுக்கு பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் பேசி கொண்டிருக்கும்போதே, அந்த பெண்ணை, மூன்று இளைஞர்களில் ஒருவர் சரமாரியாக தாக்க துவங்கினார்.
இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து, சண்டையிட்டு கொண்டிருந்தவர்களை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்து, எச்சரித்து அனுப்பினர்.

