ADDED : நவ 29, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சியில், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக மணிமாறன் என்பவரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் நியமனம் செய்துள்ளார். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் புதிய நியமன உறுப்பினராக உறுதிமொழி ஏற்று, அவர் நேற்று முன்தினம், பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், நியமன உறுப்பினர் ஆணையை, எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினார். தொடர்ந்து, நியமன உறுப்பினருக்கு எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, நடந்த அவசர கூட்டத்தில், 102 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

