தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சாகுபடி தொழில்நுட்ப விழிப்புணர்வு

சாகுபடி தொழில்நுட்ப விழிப்புணர்வு

சாகுபடி தொழில்நுட்ப விழிப்புணர்வு


ADDED : ஜூன் 18, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தை மூலம், எருமப்பட்டி ஒன்றியம், வடவத்துார் கிராமத்தில், வேளாண் துணை இயக்குனர் கவுதமன் உத்தரவுப்படி, உழவர் சந்தை விவசாயிகளுக்கான சாகுபடி தொழில் நுட்ப ஆலோசனை கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, காய்கறிகளை எந்த பட்டத்தில், எந்த பருவத்தில் சாகுபடி செய்யலாம். சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்பங்கள், அறுவடை செய்து, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் முறை குறித்து விளக்கினார்.

உதவி வேளாண் அலுவலர் கோகுல், நாமக்கல் உழவர் சந்தைக்கு வரும் அரசின் இலவச பஸ்கள், விலை விபரம் சேகரித்தல், விலை நிர்ணயம் செய்தல், மொத்த விலை, சில்லறை விலை பற்றி எடுத்துரைத்தார். மேலும், உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு, விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை பதிவு செய்தல், ஆங்கில காய்கறிகள் விலை நிர்ணயம் குறித்து, உதவிவேளாண் அலுவலர்கள் ஸ்ரீதர், ரமேஷ் ஆகியோர் விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us