ADDED : ஜூன் 18, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை,
கம்ப்யூட்டர் மயமாக்கல் குறித்து கூட்டுறவுத்துறை அலுலர்களுக்கான
பயிற்சி முகாம் நடந்தது.
இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்த பயிற்சி
முகாம் துவக்க விழாவிற்கு, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து, துவக்கி வைத்து கையேடுகளை
வழங்கி பேசினார்.
துணைப்பதிவாளர்கள் ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன்,
திருநாவுக்கரசு, பால் ஜோசப், சேகர், ஜெயந்தி, சரவணன், நாமக்கல் மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் தீனதயாளன் உள்பட பலர் பங்கேற்றனர்.
