/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மார்ச் 1ல் முதல்வர் பிறந்த நாள்சிறப்பாக கொண்டாட தீர்மானம்
/
மார்ச் 1ல் முதல்வர் பிறந்த நாள்சிறப்பாக கொண்டாட தீர்மானம்
மார்ச் 1ல் முதல்வர் பிறந்த நாள்சிறப்பாக கொண்டாட தீர்மானம்
மார்ச் 1ல் முதல்வர் பிறந்த நாள்சிறப்பாக கொண்டாட தீர்மானம்
ADDED : பிப் 26, 2025 02:01 AM
மார்ச் 1ல் முதல்வர் பிறந்த நாள்சிறப்பாக கொண்டாட தீர்மானம்
நாமக்கல் -கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், வரும், 1ல், முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அன்றைய தினம், கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, டவுன் பஞ்., வார்டு, கிளை கழகங்களில், கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்க வேண்டும். மூத்த முன்னோடிகளுக்கு வேட்டி, சேலை, பொற்கிழி வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பால், பிரட் வழங்குதல், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, இளைஞரணி மாவட்ட அமை ப்பாளர் விஸ்வா, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், மாநில மகளிரணி தொண்டரணி நிர்வாகி ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.