/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1 லட்சம் திருட்டுவாலிபருக்கு 'காப்பு'
/
ரூ.1 லட்சம் திருட்டுவாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜன 30, 2025 01:45 AM
ரூ.1 லட்சம் திருட்டுவாலிபருக்கு 'காப்பு'
எருமப்பட்டி :எருமப்பட்டி அருகே, வரகூரை சேர்ந்தவர் பாப்பாத்தி, 60; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 8ல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பாப்பாத்தி, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாப்பாத்தி அளித்த புகார்படி, எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணிவேல், 22, என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, பாப்பாத்தி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மணிவேலை, போலீசார் கைது செய்தனர்.

