/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் 148 மையங்களில் 14,402 பேர் பங்கேற்பு

ADDED : பிப் 08, 2025 12:48 AM
பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் 148 மையங்களில் 14,402 பேர் பங்கேற்பு
நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று தொடங்கிய பிளஸ் 2 செய்முறை தேர்வில், 14,402 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வு, பிளஸ் 2விற்கு வரும் மார்ச், 3ல் தொடங்கி, 25 வரையும்; பிளஸ் 1 வகுப்பிற்கு, மார்ச், 5ல் தொடங்கி, 27 வரையும்; பத்தாம் வகுப்பிற்கு, மார்ச், 28ல் தொடங்கி, ஏப்., 15 வரையும் நடக்கிறது. முன்னதாக, பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பிற்கான செய்முறை தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, நேற்று துவங்கி, வரும், 14 வரையும், பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, வரும், 15ல் தொடங்கி, 21 வரையும் நடக்கிறது. அதில், பிளஸ் 2வில், 14,402 மாணவர்களும், பிளஸ் 1ல், 14,569 மாணவ, மாணவியரும் பங்கேற்கின்றனர்.
இந்த செய்முறை தேர்விற்காக, மாவட்டம் முழுவதும், 148 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல் போன்ற பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும், 14,402 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்.