/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்பு
/
துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்பு
ADDED : மார் 15, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்பு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் யூனியன், துத்திக்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் அபிஷேக் மனைவி சினேகா, 23; கர்ப்பிணியான இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல், பாட்டி குழந்தையம்மாள், 80, என்பவருடன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 4:00 மணியளவில், குழந்தையம்மாள் கழிப்பிடத்திற்கு செல்ல, வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டில் புகுந்து அயர்ந்து துாங்கிக்கொண்டிருந்த சினேகாவின் கழுத்தில் இருந்து, இரண்டு பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.