/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை பொருள் பறிமுதல்ரூ.25 ஆயிரம் அபராதம்
/
புகையிலை பொருள் பறிமுதல்ரூ.25 ஆயிரம் அபராதம்
ADDED : ஏப் 11, 2025 01:16 AM
புகையிலை பொருள் பறிமுதல்ரூ.25 ஆயிரம் அபராதம்
நாமக்கல்:நாமக்கல்லில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையிலான குழுவினர், நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஏ.எஸ்.,பேட்டை பகுதியில் உள்ள மளிகை கடையில் ஆய்வு செய்தபோது, அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரிட்ஜில் கூலீப், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஒரு கிலோ பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

