/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 27 முதல்வர் மருந்தகம் திறப்பு25 சதவீதம் தள்ளுபடியில் மருந்து விற்பனை

ADDED : மார் 15, 2025 02:31 AM
மாவட்டத்தில் 27 முதல்வர் மருந்தகம் திறப்பு25 சதவீதம் தள்ளுபடியில் மருந்து விற்பனை
நாமக்கல்:''நாமக்கல் மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 25 சதவீதம் தள்ளுபடி விலையில், பொதுமக்களுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது,'' என, சேந்தமங்கலம் முதல்வர் மருந்தகத்தில் பார்வையிட்ட கலெக்டர் உமா கூறினார்.
சேந்தமங்கலம் முதல்வர் மருந்தகத்தில், நேற்று கலெக்டர் உமா ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களிடம், மருந்துகளின் விலை, மருந்தகத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை மூலம், 17, தொழில் முனைவோர் மூலம், 10 என, மொத்தம், 27 மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகங்களில், 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் மருந்துகளை குறைந்த விலையில், முதல்வர் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும்.
ஜெனிரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள், 1,000 முதல்வர் மருந்தகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 27 மருந்தகங்களில், கடந்த, 13 வரை, 1.33 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.