/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மே 4ம் தேதி நீட் தேர்வு என்.டி.ஏ., அறிவிப்பு
/
மே 4ம் தேதி நீட் தேர்வு என்.டி.ஏ., அறிவிப்பு
ADDED : பிப் 08, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மே 4ம் தேதி நீட் தேர்வு என்.டி.ஏ., அறிவிப்பு
புதுடில்லி:இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, வரும் மே 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட, 13 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன்
மூலமாக நேற்று துவங்கியது. மாணவர்கள், neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.