/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் பயன்படுத்திய 4 கடைகளுக்கு அபராதம்
/
பிளாஸ்டிக் பயன்படுத்திய 4 கடைகளுக்கு அபராதம்
ADDED : மார் 27, 2025 01:55 AM
பிளாஸ்டிக் பயன்படுத்திய 4 கடைகளுக்கு அபராதம்
எருமப்பட்டி:சேந்தமங்கலம் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட சிறப்பு முகாம், நேற்று காலை நடந்தது. கலெக்டர் உமா, எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என, ஆய்வு செய்தார். பின், பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஆய்வு செய்தபோது, மூன்று டீ கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, பொன்னேரி கைகாட்டியில் உள்ள பேக்கரியில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள், ஐஸ் கிரீம் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டி சுகாதாரமாக உள்ளதா என, ஆய்வு செய்தார். அப்போது, அங்கு இருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, 2,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
அலங்காநத்தம் பஞ்., முதல்வரின் கிராம சாலை திட்டத்தில் போடப்பட்ட சாலைப்பணி, அங்கன்வாடி மையம், சிவநாய்க்கன்பட்டியில் முதல்வரின் கனவு இல்லம் ஆகியவைகளை ஆய்வு செய்தார். மேலும், முத்துக்காப்பட்டி பஞ்., மகளிர் சுய உதவிக்குழுவினர் தயார் செய்யும் சணல் பைகளை பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்தார். எருமப்பட்டி டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகேஷ், பி.டி.ஓ., சுஜிதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.