/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதபால் துறை ஊழியர்கள் போராட்டம்
/
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதபால் துறை ஊழியர்கள் போராட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதபால் துறை ஊழியர்கள் போராட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதபால் துறை ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 20, 2025 01:31 AM
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதபால் துறை ஊழியர்கள் போராட்டம்
நாமக்கல்:தமிழகம் முழுவதும் தபால்துறை ஊழியர்கள், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து, நேற்று பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், 57 துணை அஞ்சலகங்கள், 282 கிளை அஞ்சலகங்களில் பணியாற்றும், 1,000 பணியாளர்கள், கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
அதில், அஞ்சல் பட்டுவாடாவை பாதிக்கும் புதிய திட்டத்தை கைவிட வேண்டும். அஞ்சல் சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். கிராமபுற அஞ்சல் ஊழியர்களை, 8-வது ஊதியக்குழு வரம்பிற்குள் சேர்க்க வேண்டும். அஞ்சல் அலுவலகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.