/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவிழாவில் மோதல்5 பேர் மீது வழக்கு
/
திருவிழாவில் மோதல்5 பேர் மீது வழக்கு
ADDED : மார் 03, 2025 01:36 AM
திருவிழாவில் மோதல்5 பேர் மீது வழக்கு
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, மரப்பரை அங்காளம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று, மயான கொள்ளை விழா நடந்தது. அப்போது, மரப்பரை கிராமத்தை சேர்ந்த, முன்னாள் பஞ்., தலைவர் பழனியப்பன், 60, மற்றும் அவரது ஆதரவாளரான அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 65, ஆகியோர், ராசிபுரம் தொப்பப்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம், 34, மரப்பரை பகுதியை சேர்ந்த அருள்குமார், 34, ரங்கசாமி, 65, ஆகியோரிடம், 'பல ஆண்டுகளாக கோவிலுக்கு வராத நீங்கள், இன்று எதற்காக கோவிலுக்கு வந்தீர்கள்' என, கேட்டுள்ளனர்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், முன்னாள் பஞ்., தலைவர் பழனியப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும், மற்றொரு தரப்பினரான நித்தியானந்தம், அருள்குமார், ரங்கசாமி ஆகியோர், ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எலச்சிபாளையம் போலீசார், இரு தரப்பை சேர்ந்த, 5 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.