/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிருஷ்ணகிரியில் 7வது நாளாகசாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கிருஷ்ணகிரியில் 7வது நாளாகசாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
கிருஷ்ணகிரியில் 7வது நாளாகசாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
கிருஷ்ணகிரியில் 7வது நாளாகசாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : பிப் 07, 2025 01:07 AM
கிருஷ்ணகிரியில் 7வது நாளாகசாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று, 7வது நாளாக, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஐந்துரோடு ரவுண்டானா, சென்னை சாலை, பழைய சப்ஜெயில் ரோடு, காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், நெடுஞ்சாலை பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, பல்வேறு புகார்கள் சென்றன. இதை விசாரித்த கிருஷ்ணகிரி, ஆர்.டி.ஓ., ஷாஜகான், ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பினார்.
இதையடுத்து கடந்த, ஜன., 31ல் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஐந்துரோடு ரவுண்டானாவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் இணைந்து துவக்கினர். நேற்று, 7வது நாளாக சென்னை சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள், ஆக்கிரமிப்பு படிக்கட்டுகள், சாக்கடை கால்வாய்கள் உள்ளிட்டவற்றை அகற்றினர். மேலும், சாக்கடை கால்வாய் இருக்கும் பகுதிகளின் மேலே போடப்பட்டிருக்கும் கற்களும் அகற்றப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கு பின், சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்ட பின், புனரமைக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரவீன்குமார், ஆர்.ஐ.,க்கள் ரமேஷ், மாதவராஜ், புனிதா, ராமமூர்த்தி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.