ADDED : ஆக 21, 2024 01:36 AM
அமைதி பேரணி
மக்களுக்கு அழைப்பு
ராசிபுரம், ஆக. 21-
இந்திய மருத்துவ சங்கம் சார்பில், கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் கொலைக்கு நீதி வழங்க கோரி, அமைதி பேரணி இன்று நடக்கிறது.
ராசிபுரம் இன்னர்வீல் சங்கம், இந்திய மருத்து சங்கம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், கிளப் ஆப் ராசிபுரம் ராயல், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் எஜூகேஷனல், அரிமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து, இன்று அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளன. மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சரியான நீதி வழங்க கோரி, இந்த அமைதி பேரணி நடத்த உள்ளனர். இன்று காலை, 7:00 மணிக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தொடங்கி, அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வரை இந்த பேரணி நடக்கவுள்ளது. இதில் பொதுமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

