/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தனியார் மில் வாகனம் ஏறியதில் தலை நசுங்கி பெண் உயிரிழப்பு
/
தனியார் மில் வாகனம் ஏறியதில் தலை நசுங்கி பெண் உயிரிழப்பு
தனியார் மில் வாகனம் ஏறியதில் தலை நசுங்கி பெண் உயிரிழப்பு
தனியார் மில் வாகனம் ஏறியதில் தலை நசுங்கி பெண் உயிரிழப்பு
ADDED : ஆக 13, 2024 06:25 AM
எலச்சிபாளையம்: பரமத்திவேலுார் அருகே, இருக்கூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 49; இவரது மனைவி அமுதா, 45; தம்பதியர், நேற்று காலை, 8:20 மணிக்கு, 'சுசூகி அக்சஸ்' டூவீலரில், வையப்பமலை அருகே, சென்னம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்-தனர். பெரியமணலியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்று-கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வன் திடீரென பிரேக் பிடித்-துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி கீழே விழுந்தது.
இதில், தமிழ்ச்செல்வன் சாலையோரத்தில் விழுந்தார். அமுதா சாலையில் விழுந்தார்.அந்தசமயம், வேலகவுண்டம்பட்டியில் இருந்து வையப்பமலை நோக்கி சென்ற தனியார் மில் வாகனம், அமுதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே அமுதா உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.