/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
/
துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 17, 2024 01:32 AM
துாய்மையை வலியுறுத்தி
விழிப்புணர்வு பேரணி
ராசிபுரம், செப். 17-
'துாய்மையை நோக்கி மேலும் ஒரு படி' என்ற வாசகத்துடன், 'துாய்மை இந்தியா இயக்கம்' புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதையடுத்து, துாய்மையே எங்களின் சேவை-2024 என்ற பெயரில், நேற்று நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேர்மன் கவிதா, பேரணியை தொடங்கி வைத்தார். இதில், அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். சேலம் சாலையில், தனியார் பள்ளி அருகே தொடங்கிய பேரணி, கடைவீதி, ஆத்துார் சாலை வழியாக, நாமக்கல் சாலை வரை நடந்தது. இதில், துாய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி வந்தனர். மேலும், துாய்மை, ஆரோக்கியம் குறித்து கோஷமிட்டனர்.