/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கமலாலய குளத்தில் படகு சவாரி எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைப்பு
/
கமலாலய குளத்தில் படகு சவாரி எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைப்பு
கமலாலய குளத்தில் படகு சவாரி எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைப்பு
கமலாலய குளத்தில் படகு சவாரி எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைப்பு
ADDED : ஆக 22, 2024 01:51 AM
நாமக்கல், ஆக. 22-
நாமக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில், கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தில், 10 ஆண்டுக்கு முன், படகுசவாரி நடந்தது. தொடர்ந்து, போதுமான பராமரிப்பு இல்லாததால், இடையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது குளத்தை பராமரிக்க டெண்டர் எடுத்தவர்கள், படகு சவாரி நடத்த மாநகராட்சியிடம் அனுமதி பெற்றனர். அதன்படி, 10 ஆண்டுக்கு பின், கமலாலய குளத்தில் மீண்டும் படகுசவாரி, நேற்று துவங்கியது.
எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்து, படகு சவாரியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநகராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோருடன், எம்.பி., ராஜேஸ்குமார் படகு சவாரி செய்து மகிழ்ந்தார். முன்னதாக சீரமைக்கப்பட்ட பூங்காவையும், மக்கள் பயன்பாட்டுக்காக, எம்.பி., திறந்து வைத்தார். மேலும் பூங்காவில் சிறுவர்களுக்கான மோட்டார் சைக்கிள், கார் சவாரியையும் அவர் பார்வையிட்டார்.
இந்த சவாரிக்கு, 8 பேர் அமரக்கூடிய மோட்டார் பொருத்திய படகு ஒன்றும், 4 பெடல் படகுகளும் புதிதாக கேரளாவில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமும் காலை, 10:00 முதல், மாலை, 6:30 மணி வரை படகு சவாரி நடக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தி.மு.க., நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் வடிவேல்குமார், இளம்பரிதி, சரவணன், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.