/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் திருத்தலத்தில் தேர்த்திருவிழா கோலாகலம்
/
சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் திருத்தலத்தில் தேர்த்திருவிழா கோலாகலம்
சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் திருத்தலத்தில் தேர்த்திருவிழா கோலாகலம்
சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் திருத்தலத்தில் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 24, 2024 07:21 AM
ராசிபுரம் : மதியம்பட்டி, சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் தேர்த்
திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
சேலம் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட மதியம்பட்டி சவுரிபாளை-யத்தில், புனித மரிய மதலேனாள் திருத்தலம் உள்ளது. இந்-தாண்டு தேர்த்திருவிழா கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் துவங்-கியது. தொடர்ந்து தினமும் மாலை, 6:30 மணிக்கு நவநாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம், சங்ககிரி பங்கு தந்தை கிருபாகரன் தலைமையிலும், நேற்று திருச்செங்கோடு பங்கு தந்தை எட்வர்டு ததேயுஸ் தலைமையிலும், நவநாள் திருப்பலி நடந்தது. 20ல், பட்லுார் அருட்பணி விக்டர் தலைமையில் நவநாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு சேலம் மறைமாவட்ட புதிய குருக்கள் தலைமையில் திருப்பலியும், 7:15 மணிக்கு சிலுவைப்பாதை நிலைகள் மந்தி-ரிப்பு, 7:30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.
சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில், குண-மளிக்கும் திருப்பலியும், நள்ளிரவு, 12:00 மணிக்கு புனிதையின் அலங்கார தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளி புனிதர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். நேற்று காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை பங்கு தந்தை கிளமெண்ட் ராஜ், பங்கு மக்கள் செய்துள்ளனர். ஒரு காரியத்தை நினைத்து கொண்டு, இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டி கொண்டால் உடனே நிறை-வேறும் என்பதால், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தமிழ-கத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து பலர் பங்-கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.