/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் காங்., ஆர்ப்பாட்டம்
/
நாமக்கல்லில் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2024 01:45 AM
நாமக்கல், நாமக்கல்லில், பிரதமர் மோடியை கண்டித்து, காங்., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிய போது, பா.ஜ.,எம்.பி. அனுராக்தாகூர் அவரை பற்றி அவதுாறான கருத்தை தெரிவித்தார். இந்த கருத்து அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அனுராக்தாகூர் பேசியதை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், பிரதமர் மோடியை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில், மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், நகர தலைவர் மோகன், ராசிபுரம் நகர தலைவர் முரளி, கொல்லிமலை குப்புசாமி, மகளிர் அணி ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.