/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் தேக்கத்தால் கிணற்றில் மாசு
/
கழிவுநீர் தேக்கத்தால் கிணற்றில் மாசு
ADDED : ஆக 20, 2024 03:05 AM
நாமக்கல்: நாமக்கல், அழகு நகர் பகுதியில் மழைநீருடன், கழிவு நீரும் தேங்கியுள்ளதால், கிணறுகளில் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக, அப்பகுதி மக்கள், கலெக்டர் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாநகராட்சி, 34வது வார்டு பகுதியில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி அமைந்துள்ளது. அருகிலுள்ள காந்தி நகர், ராக்கி நகர், கூட்டுறவு காலனி, அன்பு நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர், கல்லுாரி வளாகத்தின் தென்பகுதியில் தேங்கியுள்ளது. மேலும், அழகு நகர் பகுதி மேற்புறம் உள்ள, 15 வீடுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கழிவுநீரோடு, மழை நீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் மாசடைந்து உபயோகிக்க முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. 318 வீடுகள் கொண்ட அழகுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, மாநகராட்சி வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே, எங்களுக்கு உரிய குடிநீர் கிடைக்கவும், சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.