ADDED : ஆக 01, 2024 02:03 AM
நாமக்கல்:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முழுதும், 15 ஒன்றியத்தில் உள்ள தலைமை பள்ளிகளில் பள்ளி அளவிலான பேச்சு போட்டியும், தொடர்ந்து வட்டார அளவிலான பேச்சு போட்டியும், நேற்று நடந்தது. அதில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு, நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான போட்டி நடந்தது.
அதில், பள்ளி அளவிலான போட்டியில் கீரம்பூர் அரசு மாதிரி பள்ளி மாணவர் சுரேந்தர் முதலிடம், வெடியரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஆதிரா, 2ம் இடம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அமீர், 3ம் இடம் பிடித்தனர். இதேபோல், கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கான போட்டியில், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லுாரி மாணவர் ராஜேஸ்கண்ணன் முதலிடம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரி மாணவி மவுலியா, 2ம் இடமும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி மாணவி கோபிகா, மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.