/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலவச லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவியர் மனு
/
இலவச லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவியர் மனு
ADDED : செப் 03, 2024 04:37 AM
நாமக்கல்: இலவச லேப்டாப் கேட்டு, பள்ளிப்பாளையம் அரசு பள்ளியின் முன்னாள் மாணவியர், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
குமாரபாளையம் தாலுகா, பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2017-18ம் கல்வியாண்டில், 200க்கும் மேற்பட்ட மாணவியர், பிளஸ் 2 படித்தோம். அடுத்து வரும் கல்வியாண்டில் இலவச லேப்டாப் கொடுப்பதாக உறுதிய-ளித்ததை அடுத்து, நாங்கள் அனைவரும் மாற்றுச்சான்றிதழ் பெற்-றுச்சென்றோம்.
ஆனால், லேப்டாப் கொடுக்கவில்லை. நாங்கள் அனைவரும் விசைத்தறி தொழிலாளிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, தொழில் நுட்ப அறிவு கிடைக்கும் வகையில், 2017-2018ம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த எங்களுக்கு இல-வச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.