/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்
/
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்
ADDED : ஜூலை 02, 2024 06:54 AM
நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் உமா தலைமையில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்துவது குறித்த ஆலோ-சனை கூட்டம் நடந்தது. அப்போது, கலெக்டர் உமா கூறு-கையில், ''முதல்வரின் காலை உணவு திட்டம், ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வட்டாரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்-ளிகளில் விரிவுபடுத்துப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 843 பள்ளிகளில், 40,201 மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். அதை தொடர்ந்து, ஊரக பகுதிகளில் உள்ள, 42 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1,889 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது,'' என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.